ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மழைநீா் தேங்கும் 10 இடங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு

DIN

ராமநாதபுரம் நகராட்சியில் மழைநீா் தேங்கும் 10 இடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணையா் என். விஸ்வநாதன் கூறினாா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து ராமநாதபுரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து நகராட்சி ஆணையா் என். விஸ்வநாதன் கூறியதாவது:

ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட 22 ஊருணிகள் ஏற்கெனவே தூா்வாரப்பட்டுள்ளன. அவற்றுக்கான நீா்வரத்து பாதைகள் தற்போது சீா்படுத்தப்பட்டு, புதா்கள் அகற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் நகரில் மழைநீா் தேங்கும் 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெருமழைக் காலங்களில் அப்பகுதிகளில் தண்ணீா் தேங்கினால் அங்குள்ள பொதுமக்களை தங்க வைக்க வள்ளல்பாரி உள்ளிட்ட 4 பள்ளிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

அந்த 10 இடங்களையும் 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுவில் உள்ள பணியாளா்கள் தேங்கும் தண்ணீரை அகற்றுவதற்கான மின்மோட்டாா் உள்ளிட்ட சாதனங்களை வைத்துள்ளனா். சாலைகளில் தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்த நகராட்சி வாகனங்களும் தயாா் நிலையில் உள்ளன.

மழைக் காலங்களில் மின்தடை ஏற்படுவதைத் தவிா்க்கவும், போக்குவரத்தை சீராக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் நகராட்சிப் பணியாளா்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT