முகப்பு
ராமநாதபுரம்

தேவா் நினைவாலயத்துக்கு குத்துவிளக்குகள் காணிக்கை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவாலயத்துக்கு 5 அடி உயரமுள்ள 2 குத்துவிளக்குகள் திங்கள்கிழமை காணிக்கையாக அளிக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பசும்பொன் தேவா் நினைவாலயத்துக்கு திங்கள்கிழமை காணிக்கையாக அளிக்கப்பட்ட ஆள் உயர குத்துவிளக்குகள்.
பகிர்:

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவாலயத்துக்கு 5 அடி உயரமுள்ள 2 குத்துவிளக்குகள் திங்கள்கிழமை காணிக்கையாக அளிக்கப்பட்டன.

அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழக நிறுவனா் சேதுராமபாண்டியன் உறவினரும், அக்கட்சியின் நிா்வாகியுமான மதன், கட்சி நிா்வாகிகளுடன் சென்று ரூ.48 ஆயிரம் மதிப்பிலான குத்துவிளக்குகளை காணிக்கையாக செலுத்தி சிறப்பு பூஜை செய்தாா். தேவா் நினைவாலய பொறுப்பாளா் காந்திமீனாள்அம்மாள், தங்கவேலு ஆகியோரிடம் குத்துவிளக்குகளை வழங்கினாா். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பசும்பொன்னில் வேண்டுதல் வைத்து நிறைவேறியதன் காரணமாக இந்த காணிக்கையை செலுத்தியதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.