ராமேசுவரம்: கடலில் விடப்பட்ட 10 லட்சம் ஃபிளவர் இறால் குஞ்சுகள்
மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 10 லட்சம் ஃபிளவர் இறால் குஞ்சுகள் ராமேசுவரம் கடலில் சனிக்கிழமை விடப்பட்டது.
மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 10 லட்சம் ஃபிளவர் இறால் குஞ்சுகள் ராமேசுவரம் கடலில் சனிக்கிழமை விடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அதிகளவில் இறால் மீன்கள் கிடைக்கும் வகையில் மண்டத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஃபிளவர் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 10 லட்சம் ஃபிளவர் இறால் குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தங்கச்சிமடம் (பாக் நீரிணை) கடல் பகுதியில் விடப்பட்டது. மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய நிர்வாக குழு உறுப்பினரான கே. முரளிதரன் தலைமை வகித்தார்.
கடல்மீன் ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி ரெ. ஜெயக்குமார், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், அலுவலர்கள், மற்றும் மீனவர்கள் பங்கேற்றனர். 2017 முதல் இன்று வரையில் ஒரு கோடியே 7 லட்சம் ஃபிளவர் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாக பொறுப்பு விஞ்ஞானி தெரிவித்தார்.