முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் பள்ளிகள் கருத்துக் கேட்புக் கூட்டம்

திருவாடானை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களின் தலைமையில் நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
திருவாடானையில் நடந்த பள்ளிகள் கருத்துக் கேட்புக் கூட்டம்.
பகிர்:

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இதில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் அனைத்து பெரும்பாலான தாய், தந்தையர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்கக்களை பதிவு செய்தனர். இதில் பாண்டுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 10.00 மணியளவில் இக்கருத்துக் கேட்புக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் பங்கு கொண்டனர். கோடனூர் ஊராட்சி மன்றத் தலைவர் தங்க காந்தி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலா கண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →