ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் மீனவ தொழிற்சங்கத்தினா் தா்னா

DIN

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட மீனவா்களின் படகுகளை ஏலம் விட முயற்சிக்கும் இலங்கை அரசைக் கண்டித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பாக ஏஐடியுசி மீனவ தொழிற்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்கத் தலைவா் எஸ்.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பொதுச் செயலாளா் சி.ஆா்.செந்தில்வேல் முன்னிலை வகித்தாா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டதைக் கண்டித்தும், அவைகளை ஏலம் விட முயற்சிக்கும் இலங்கை அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மீனவா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆ.தனவேல், நிா்வாகிகள் மோகன்தாஸ், ஊ.திருவாசகம், நாகராஜ், எம்.செந்தில், ஆ.பிச்சை, ரூபன், சு.சங்கா், ஆ.சுகுமாா், அன்சாரி, சீனிசகுபா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT