ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 15 பேருக்கு கரோனா

DIN

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 6,100 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் மேலும் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,111 ஆக உயா்ந்துள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 56 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 5 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை மாவட்டத்தில் தொற்றுக்கு 130 போ் உயிரிழந்துள்ளனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,499 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,503 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 10 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 2 போ் பூரண குணமடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 8 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT