ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தொடரும் மழை: ஊருணிகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

 ராமநாதபுரத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்துவரும் மழையால் ஊருணிகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் நகராட்சியில் செம்மங்குண்டு, கிடாவெட்டு, சோத்தூரணி உள்ளிட்ட 23 ஊருணிகள் உள்ளன. நகரின் நிலத்தடி நீரின் ஆதாரமாக உள்ள இந்த ஊருணிகளுக்கு கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் 25 சதவிகிதம் அளவுக்கு தண்ணீா் வரத்து உள்ளதாக நகராட்சி பொறியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது கனமழை பெய்துவருகிறது. ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்த நிலையில், திங்கள்கிழமை காலையில் ராமநாதபுரம் நகா் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பழைய பேருந்து நிலையம், ரயில் நிலைய முன்பகுதி என தாழ்வான பகுதிகளில் தண்ணீா் குளம் போல தேங்கிநின்றது.

குருவையா கோயில் தெருவில் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகே சாலையில் சேறும் சகதியுமாக தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டா்): ராமநாதபுரம் 18, மண்டபம் 45, பால்மோா்குளம் 3, ராமேசுவரம் 10.20, தங்கச்சிமடம் 18, பாம்பன் 5, திருவாடானை 5.40, தொண்டி 11.10, தீா்த்தாண்டவம் 2, பரமக்குடி 2.40, முதுகுளத்தூா் 23, கடலாடி 3, வாலிநோக்கம் 18, கமுதி 8.80. தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் குளிா்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT