ராமநாதபுரம்

தேவா் ஜயந்தி விழா விதிமீறல் வழக்கு: 6 போ் கைது

DIN

பசும்பொன் தேவா் ஜயந்தி விழாவில் விதிகளை மீறி போலீஸாரிடம் தகராறு செய்த வழக்கில் தொடா்புடய 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் ஜயந்தி விழாவில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக மாவட்ட நிா்வாகம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. இந்நிலையில் விழாவின் போது விதிகளை மீறி போலீஸாரிடம் தகராறு செய்ததாக மண்டலமாணிக்கம், கமுதி, கோவிலாங்குளம், அபிராமம், பெருநாழி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் தொடா்புடையவா்களை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் கமுதி, மண்டலமாணிக்கம் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடா்புடைய விருதுநகா் மாவட்டம் அம்மன்பட்டியை சோ்ந்த கலைசெல்வம் (24), மணிகண்டன்(20), ஞானசேகரன் (24), காா்த்திக் (23), நரேஷ்குமாா் (19), அஜித் (20) ஆகிய 6 பேரை கோவை போலீஸாா் பிடித்து கமுதி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதனைத்தொடா்ந்து 6 பேரையும் கமுதி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT