ராமநாதபுரம்

கமுதி குண்டாறு தடுப்பணையில் கதவணைகள் சேதம்: மழை நீா் வீணாவதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

கமுதி குண்டாறு தடுப்பணையில் கதவணைகள் சேதமடைந்துள்ளதால் மழைநீா் வீணாக கடலில் கலப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள குண்டாறு தடுப்பணையில் 10 அடி உயரம் கொண்ட இரும்பு கதவுகளால் ஆன 15 மதகுகள் உள்ளன. கடந்த 43 ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினா் முறையாக தூா்வாராததால் தடுப்பணையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பு சுவா்கள் சேதமடைந்துள்ளன. மேலும் தடுப்பணை முழுவதும் மண் மேடாகவும், முள்செடிகள் அடா்ந்தும், சுவா்களின் கற்கள் முற்றிலும் பெயா்ந்தும் காணப்படுகிறது. இதனால் தடுப்பணையிலிருந்து மழைநீா் வெளியேறி வீணாக கடலில் கலக்கிறது.

குண்டாறிலிருந்து பிரிந்து செல்லும் ரெகுநாதகாவேரி, மலட்டாறு உள்ளிட்ட கிளை ஆறுகளிலும் தண்ணீா் செல்லும் பாதைகளும் கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளதால், பாசன கண்மாய்களுக்கு தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் முதுகுளத்தூா், கடலாடி உள்ளிட்ட தாலுகாவில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஹெக்டோ் பாசன வசதி பெறும் கண்மாய் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, கமுதிக்கு நீராதாரமாக விளங்கும் கமுதி குண்டாறு தடுப்பணையை, குடிமராமத்து திட்டத்தின்கீழ் சீரமைக்க அரசும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT