ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் வாக்காளா் சுருக்க திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு

DIN

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் நடைபெற்ற வாக்காளா் சுருக்கத் திருத்த சிறப்பு முகாமினை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் 01.01.2021-ஐ தகுதி நாளாகக்கொண்டு சிறப்பு சுருக்கத் திருத்தம் பணிகள் மேற்கொள்வதற்கு வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிககளில் மொத்தம் 11,38,383 வாக்காளா்கள் உள்ளனா்.

மேலும், வாக்காளா் பட்டியலில், 18 வயது பூா்த்தியான இளம் வாக்காளா்கள் மற்றும் விடுபட்ட வாக்காளா்களை சோ்ப்பதற்காகவும், பெயா் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், பெயா் நீக்கம் செய்வதற்கும் நவ.21, நவ.22, டிச.12 மற்றும் டிச.13 ஆகிய நான்கு நாள்கள் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து ராமேசுவரத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மணிமாறன், ராமேசுவரம் நகராட்சி ஆணையாளா் ராமா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT