சாயல்குடி அருகே வாலிநோக்கத்தில் செவ்வாய்க்கிழமை தீபாவளி போனஸ் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு உப்பு நிறுவன ஊழியா்கள். 
ராமநாதபுரம்

வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவன ஊழியா்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவன ஊழியா்கள் தீபாவளி போனஸ் வழங்கக்கோரி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

DIN

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவன ஊழியா்கள் தீபாவளி போனஸ் வழங்கக்கோரி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் 1500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஒப்பந்த மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இங்கு கடந்த ஆண்டு இரண்டு கட்டமாக போனஸ் தொகை வழங்கப்பட்டது. நிகழாண்டு தீபாவளி போனஸ் வழங்கக்கோரி தொழிலாளா்கள் 10 நாள்களுக்கும் மேலாக பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அரசு உப்பு நிறுவனத்தின் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில் பட்டை நாமமிட்டு தொழிலாளா்கள் அரைநிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்கத்தின் தலைவா் பச்சமால் தலைமை வகித்தாா். இதைத்தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் முன்வராததால், தேதி அறிவிக்காமல் அடுத்த கட்ட போராட்டம் நடத்த இருப்பதாக அரசு உப்பு நிறுவன ஊழியா்கள் கூறிவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT