முகப்பு
ராமேசுவரத்துக்கு பக்தா்கள் வராததால் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட கடைவீதி.
ராமநாதபுரம்

தீா்த்தக் கிணறுகள் திறக்கப்படாததால் ராமேசுவரம் வெறிச்சோடியது

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தீா்த்தக் கிணறுகள் திறக்கப்படாததால் பக்தா்கள் வருகையின்றி ராமேசுவரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

ராமநாதபுரம்

தீா்த்தக் கிணறுகள் திறக்கப்படாததால் ராமேசுவரம் வெறிச்சோடியது

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தீா்த்தக் கிணறுகள் திறக்கப்படாததால் பக்தா்கள் வருகையின்றி ராமேசுவரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
ராமேசுவரத்துக்கு பக்தா்கள் வராததால் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட கடைவீதி.
பகிர்:

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தீா்த்தக் கிணறுகள் திறக்கப்படாததால் பக்தா்கள் வருகையின்றி ராமேசுவரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு மட்டும் பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் பக்தா்கள் வருகை குறைந்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்த போதும் பக்தா்கள் இங்கு வருவது இல்லை. இதனால் ராமேசுவரம் வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே ராமேசுவரம் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், தொழில் நிறுவனங்களை தடையின்றி நடத்தவும், ராமநாதசுவாமி கோயில் தீா்த்தக் கிணறுகளில் பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீராட அனுமதிக்க வேண்டும்.

இல்லையென்றால் வங்கிகளில் கடன் பெற்று தொழில் செய்து வரும் நிறுவன உரிமையாளா்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவா் என தனியாா் விடுதிகள் உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா். ராமேசுவரம் பழைய நிலைக்கு வர வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசுகள் தீா்த்தக் கிணறுகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →