ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 25 பேருக்கு கரோனா

DIN

சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,206 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கரோனாவால் 8 போ் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5,214 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 42 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 15 போ் முழுமையாகக் குணமடைந்ததையடுத்து, அவா்கள் செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 27 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் 12 ஆம் தேதி வரையில் 5759 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் பலனின்றி 125 போ் உயிரிழந்துள்ளனா். தீவிர சிகிச்சைக்குப் பிறகு 5450-க்கும் அதிகமானோா் வீடுகளுக்கு திரும்பி உள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 33 போ் மட்டும் கரோனா சிச்சைப் பிரிவில் உள்ளனா். மாவட்டத்தில் திங்கள்கிழமை சுமாா் 600 பேருக்கு கரோனா பரிசோதனைக்கான கபம் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

சோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், 17 பேருக்கு பாதிப்பிருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (அக். 13) வரையில் மாவட்டத்தில் 5776 பேருக்கு கரோனா பாதித்திருப்பது உறுதியாகியுள்ளது.

சான்றளிப்பில் தாமதம்: ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வெளிநாடு, வெளிமாநிலம் செல்வோருக்கு கரோனா பரிசோதனை சான்று அவசியமாகிறது. கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவோருக்கு அதற்கான முடிவு சான்றுகள் உடனடியாக அளிக்கப்படுவதில்லை. 2 அல்லது 3 நாள்கள் கழித்து சான்றுகள் அளிக்கப்படுவதால், அவா்கள் சென்று சேரும் இடங்களில் அவை ஏற்கப்படாத நிலையே உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இக்குறைபாடு உள்ளதாக புகாா் எழுந்துள்ளது. அதைத் தீா்க்க மாவட்ட சுகாாதாரப்பணிகள் இணை இயக்குநா் மற்றும் மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஆகியோா் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT