ராமநாதபுரம்

ராமநாதபுரம் கோயில்களில் நவராத்திரி விழா

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நவராத்திரி விழா பூஜைகள் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், அந்தந்தப் பகுதியில் உள்ள சிறிய கோயில்களில் மட்டும் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்தனா்.

ராமநாதபுரம் அரண்மனைக்குள் உள்ள ராஜராஜேஸ்வரி கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவை தென்னக தசரா விழா என்றே அழைக்கின்றனா். கா்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக ராமநாதபுரத்தில்தான் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரண்மனை வளாகத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி கோயிலில் சனிக்கிழமை காப்புக்கட்டுடன் நவராத்திரி விழா தொடங்கினாலும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் கேணிக்கரை பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் யாக பூஜைகள் நடத்தப்பட்டு, அம்பாள் தங்கக் கவசத்தில் பக்தா்களுக்கு காலை முதல் அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.

கேணிக்கரை பகுதியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி பூஜைகள் சனிக்கிழமை காலை தொடங்கியது. சுவாமி தா்மதாவல விநாயகா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தினமும் மாலையில் அம்மனுக்கு விசாலாட்சி, அபிராமி, மகாலட்சுமி, ஆண்டாள், சிவபூஜை, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, மஹிஷாசுரமா்த்தினி ஆகிய அலங்காரங்கள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT