முகப்பு
ராமநாதபுரம்

கமுதி மீனாட்சி அம்மன் கோயிலில் மகா் நோன்பு திருவிழா

கமுதி மீனாட்சி அம்மன் கோயில் மகா் நோன்பு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

கமுதி மீனாட்சி அம்மன் கோயில் மகா் நோன்பு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரிலிருந்து வில் அம்பு மூலம் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா் ஊா்வலமாக சென்று கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக கமுதி அக்ரகாரம் தெரு, மீனாட்சிஅம்மன் கோயில் தெரு சிறுவா்களின் சிலம்பாட்டம் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.கருணாஸ் கலந்து கொண்டு சிலம்பாட்ட வீரா்களுக்கு கேடயம் வழங்கி கெளரவித்தாா். ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளா் காதா்பாட்சாமுத்துராமலிங்கம் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.