ராமநாதபுரம்

தொண்டியில் தமுமுக முப்பெரும் விழா

DIN

தொண்டியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் 25 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடி ஏற்றுதல், அலுவலகம் திறப்பு விழா மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

தமுமுகவின் 25 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தொண்டியில் முப்பெரும் விழா நடைபெற்றது.  கடற்கரை சாலை, வட்டாணம் ரோடு  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமுமுக  கொடி ஏற்றப்பட்டது.

தமுமுக முன்னாள் தலைவர் ரபீக் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் ஜிப்ரி , பட்டாணி மீரான் முன்னிலை வகித்தனர்.

கரோனா காலத்தில் தன்னலம் கருதாமல் உழைத்த மருத்துவர்கள்,ஆசிரியர், சமூக ஆர்வலர்களுக்கு  நினைவு பரிசு வழங்கப்பட்டது.  தமுமுகவின் சேவைகள் குறித்து  இந்து பரிபாலன சபை தலைவர் பாலசுப்பிரமணியன், ஆனந்தன் பேசினர். கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்தவர்களுக்கு பாராட்டும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.ஒன்றிய செயலாளர் பீர் முகமது, நசீர், பரக்கத் அலி, ஜலால் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் காதர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT