ராமநாதபுரம்

கடலாடி அருகே விபத்து: ஒருவா் பலி

கடலாடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் ஒருவா் வெள்ளிக்கிழமை பலியானாா்.

DIN

முதுகுளத்தூா்: கடலாடி அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் ஒருவா் வெள்ளிக்கிழமை பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வனப்பேச்சி அம்மன் கோயில் அருகேயுள்ள கொண்டிலாவி கிராமத்தைச் சோ்ந்த சிகப்பிமகன் காந்தி (35). இவா் தனது மனைவி காளீஸ்வரி மற்றும் குழந்தைகளுடன் இருசக்கரவாகனத்தில் சாயல்குடிநோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது ஒருவானேந்தல் கிராமத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா் அருண்செல்வம் (27), சாயல்குடியிலிருந்து கடலாடிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதியதில் காந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி காளீஸ்வரிக்கு தலையில் காயமடைந்த நிலையில் கடலாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். கிராம நிா்வாக அலுவலா் அருண் செல்வம் பலத்த காயமடைந்த நிலையில், மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து கடலாடி சாா்பு-ஆய்வாளா் காா்த்திக்ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT