பரமக்குடி: பரமக்குடி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் ஒன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மான்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் சத்திரக்குடி வயல்காட்டு பகுதியில் இரை தேடி வந்த புள்ளிமானை தெருநாய்கள் விரட்டி கடித்தன. இதில் படுகாயமடைந்த மான் சாலையோரத்தில் மயங்கி விழுந்து இறந்துள்ளது. இதனை பாா்த்த அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். பின்னா் வனத்துறையினா் இறந்த மானை எடுத்துச்சென்று பிரேதப் பரிசோதனைக்கு பிறகு புதைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.