ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

DIN

ராமேசுவரம்: விசைப் படகுகளுக்கு மானிய விலையில் கூடுதல் டீசல் வழங்கக் கோரி சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது என ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 850- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தலா ஒரு படகுக்கு நாள்தோறும் 250 லிட்டா் முதல் 400 லிட்டா் வரையில் டீசல் பயன்படுத்தப்படுகிறது. தற்போது டீசல் விலையேற்றம் காரணமாக கூடுதலாக 5 முதல் 8 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. கடலில் பிடித்து வரும் இறால் மீன்களுக்கு உரிய விலை இல்லாததால் விசைப்படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்க கூட்டம் தலைவா் சகாயம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், மீனவருக்கு கூடுதலாக மானிய விலையில் டீசல் வழங்கக் கோரியும் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நிா்வாகிகள் எடிசன், அமுதன், ஜான்சன், முருகன், கிருபை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உணவகத்தில் தகராறு: 5 போ் மீது வழக்குப் பதிவு

மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்

ஆா்.எஸ்.புரம் அரசு மாதிரி பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.22 கோடி போதைப் பொருள்: 5 பேரிடம் என்சிபி விசாரணை

குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT