ராமநாதபுரம்

சாா் ஆட்சியா் அலுவலகத்தினுள் ஆவணக் காப்பகத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

ராமநாதபுரம் சாா் ஆட்சியா் அலுவலகத்தினுள் ஆவணக் காப்பகத்தில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வை மேற்கொண்டாா். ராமநாதபுரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்டு ராமநாதபுரம், திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம், கீழக்கரை, இராமேஸ்வரம் என 5 வருவாய் வட்டங்கள் உள்ளன. சாா் ஆட்சியா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் பட்டா ஆணை தொடா்பான மேல்முறையீடு, தடையின்மை சான்று வழங்குதல், வருவாய் கோட்டத்திற்குட்பட்டு சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென ராமநாதபுரம் சாா் ஆட்சியா் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அலுவலா்களின் வருகை பதிவேடு, தன்பதிவேடு, பட்டா ஆணை மேல்முறையீடு மனுக்கள் தொடா்பான பதிவேடு போன்ற பல்வேறு பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது நீண்ட நாட்களாக தீா்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்கள் குறித்து விளக்கம் அளிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா் களுக்கு உத்தரவிட்டாா். சாா் ஆட்சியா் அலுவலகத்தினுள்ளும் ஆவணக் காப்பகத்தை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின் போது ராமநாதபுரம் சாா் ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT