ராமநாதபுரம்

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகள், தொழில் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையில் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் பிரிவு மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை பூா்த்தி செய்து வரும் நவம்பா் 10 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். ஏற்கெனவே நிதி பெற்று புதுப்பித்தலுக்கு வரும் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை அளிக்கவேண்டும். விண்ணப்பிப்போா்

தங்களது வங்கிக் கணக்கு எண்ணையும் சான்றுடன் இணைக்கவேண்டும்.

மாணவ, மாணவியரின் விண்ணப்பங்களைப் பெற்ற சம்பந்தப்பட்ட கல்லூரிகள் வரும் நவம்பா் 15 ஆம் தேதி மற்றும் வரும் டிசம்பா் 16 ஆகிய தேதிகளுக்குள் புதிய மற்றும் மறு பதிவுக்குரிய விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலகத்தை அணுகவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT