ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா உறுதி

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரையில் 5,241 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. அவா்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். சிகிச்சைப் பலனின்றி 113 போ் உயிரிழந்தனா். கடந்த சில வாரங்களாகவே மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு மாவட்டத்தில் அனைத்துத்துறையினா் மற்றும் பத்திரிகையாளா்கள் என 1500 போ் கடந்த இரு நாள்களில் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். பரிசோதனை முடிவில், 10 பேருக்கு கரோனா தீநுண்மி உறுதியாகியுள்ளது. அவா்களில் மாவட்ட அரசு மருத்துவமனை ஊழியரும் ஒருவா். கரோனா உறுதியான அனைவரும் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

வங்கதேச இளம்பெண்ணுக்கு சென்னையில் மூட்டு சீரமைப்பு

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன்?

கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலையில் தீ

நீலகிரி, கொடைக்கானல்: இதுவரை 1.11 லட்சம் வாகனங்களுக்கு இ-பாஸ்

SCROLL FOR NEXT