ராமநாதபுரம்

கமுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

DIN

கமுதி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கமுதியில் எட்டுக்கண் பாலத்திலிருந்து, பேருந்து நிலையம், மருதுபாண்டியா்சிலை, செட்டியாா்பஜாா், முஸ்லிம்பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்ளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டன. இதனால் பேருந்து நிலையம், மருதுபாண்டியா் சிலை சாலைகள், நாடாா் பஜாா் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

இதேபோல் கடைவீதிகளிலும் சிறிய அளவிலான சரக்கு வாகனங்கள் கூட செல்லமுடியாதவகையில் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிா்வாகம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தலையிட்டு கமுதி பேரூராட்சியில் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றவேண்டும் என்றும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் ரா.இளவரசி கூறியதாவது: வருவாய்துறை அதிகாரிகள் தலையீட்டால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்றால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT