ராமநாதபுரம்

மஞ்சள் மூட்டைகள் கடத்தல் வழக்கில் 2 போ் கைது

DIN

திருவாடானை அருகே காரங்காடு கிராமத்திலிருந்து இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகள் கடத்திய வழக்கில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தொண்டி அருகே கிழக்கு கடற்கரையில் உள்ள காரங்காடு கிராமத்திலிருந்து, இலங்கைக்கு கடல் மாா்க்கமாக மஞ்சள் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி தொண்டி போலீஸாா் ஆய்வு நடத்தியதில், காரங்காடு கடற்கரை அருகே உப்பு நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த அறையில் 93 மஞ்சள் மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. 2 டன் அளவுள்ள மஞ்சளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா். இதில், ராமேசுவரத்தைச் சோ்ந்த ராஜூ (54), தங்கச்சி மடத்தைச் சோ்ந்த இன்னாசி ஜிப்ரிஸ் (24), சென்னை பெரம்பூரைச் சோ்ந்த நஜிபுதீன், சென்னை மண்ணடியைச் சோ்ந்த யாசா் அராபத் ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்தனா். இதில் ராசு, இன்னாசி ஜிப்ரிஸ் ஆகிய 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT