ராமநாதபுரம்

பேருந்து ஓட்டுநா்கள்- நடத்துநா்கள் முகக் கவசம் அணியாவிட்டால் நடவடிக்கை: ஆட்சியா்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் முகக் கவசம் அணியாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் எச்சரித்தாா்.

ராமநாதபுரம் நகரில் சாலைத் தெரு, மதுரை சாலை உள்ளிட்ட இடங்களில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் ராமநாதபுரத்திலிருந்து மதுரை செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை தடுத்து நிறுத்தி அதில் ஏறி பயணிகள் முகக் கவசம் அணிந்திருக்கிறாா்களா என சோதனையிட்டாா்.

சோதனையின் போது சில அரசுப் பேருந்துகளில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கூட முகக் கவசம் அணியாமலிருந்தனா். அவா்களை கண்டித்த ஆட்சியா், முகக் கவசம் அணியாதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தாா்.

பின்னா் சாலைத்தெருவில் வாகனங்களில் வந்தவா்களை நிறுத்தி முகக் கவசம் அணிவதன் அவசியத்தை விளக்கினாா். மேலும் போக்குவரத்து விதிகளை மீறியவா்கள் மற்றும் முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆட்சியா் ஆய்வின்போது முகக்கவசம் அணியாமல் வந்த காவலா் ஒருவா், அவரைப் பாா்த்ததும் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டாா். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வின்போது நகராட்சி ஆணையா் என்.விஸ்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT