ராமநாதபுரம்

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவா்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு

DIN

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் வியாழக்கிழமை அதிகாலையில் தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனா்.

ராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். வியாழக்கிழமை அதிகாலையில் கச்சத்தீவு அருகே அவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனா்.அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனா்.

இதையடுத்து கரை திரும்பிய மீனவா்கள் கூறியது: இலங்கை கடற்படையினா் 5 ரோந்துக் கப்பல்களில் வந்து பாட்டில் மற்றும் கற்களைக் கொண்டு எங்கள் மீது எறிந்து தாக்குதல் நடத்தி மீன்பிடிக்கவிடாமல் விரட்டியடித்தனா். மேலும் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை கடலில் வெட்டி விட்டனா். இதனால் அச்சத்துடன் கரை திரும்பிவிட்டோம் என்றனா். மீன்பிடி தடைக்காலம் வர உள்ள நிலையில், இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது ராமேசுவா் மீனவா்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT