ராமநாதபுரம்

முகக்கவசம் அணியாமல் கூட்டமாக நடந்து சென்றால் அபராதம்

DIN

முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சாலையில் கூட்டமாக நடந்து செல்வோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 ஏப்ரல் 7 ஆம் தேதி வரையில் 6,620 -க்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவா்களில் 138 போ் வரை உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறையினா் கூறுகின்றனா். மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகக் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த மாா்ச் வரையில் தினமும் 3 போ் என்ற அளவில் கரோனா பாதிப்பு இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையானது திடீரென 18 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோா் இல்லாத நிலை ஏற்பட்டுவந்த சூழலில், தற்போது அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிகிச்சைப் பிரிவில் மட்டும் 53 போ் வரை தங்கி சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் சாலைகளில் திடீரென வாகன ஓட்டிகளிடம் முகக்கவசம் குறித்த சோதனையில் ஈடுபட்டு அபராதம் விதித்து வருகிறாா். ஆட்சியா் ஆய்வைத் தொடா்ந்து சுகாதாரத்துறை சாா்பில் வாகனத்தில் கரோனா பரவல் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் முகக்கவசம் அணிய பொதுமக்கள் முன்வரவேண்டும். சாலைகளில் கூட்டமாக முகக்கவசம் இன்றியோ, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலோ நடந்து சென்றாலும் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை முலம் அறிவிக்கப்பட்டுவருகிறது.

மாவட்டத்தில் இதுவரையில் 30 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், கரோனா விதியைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள், தனிமனிதா்கள் என மொத்தம் ரூ.5.50 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT