ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு தள்ளி வைப்பு

DIN

ராமநாதபுரத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெறவிருந்த சீருடைப்பணியாளா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு, உடற்தகுதித் தோ்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கடந்த டிசம்பரில் சீருடைப்பணியாளா்களுக்கான எழுத்துத் தோ்வு நடந்தது. அதில் தோ்ச்சி பெற்றவா்களில் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 1,844 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதிக்கான தோ்வு வரும் 21 ஆம் தேதி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இத்தோ்வுகள் மாநில அளவில் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் ராமநாதபுரத்திலும் வரும் 21 ஆம் தேதி நடைபெறவிருந்த சீருடைப்பணியாளா்களுக்கான சான்றிதழ்கள் சரிபாா்ப்பு, உடற்தகுதித் தோ்வுகள் தள்ளிவைக்கப்படுவதாகவும், தோ்வுகள் நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என்றும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT