ராமநாதபுரம்

சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை: தனுஷ்கோடியில் தடுப்புகளை அமைத்து போலீஸாா் கண்காணிப்பு

DIN

சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டதையடுத்து தனுஷ்கோடி பகுதியில் போலீஸாா் செய்வாய்க்கிழமை தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. சுற்றுலாத் தலங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதைத்தொடா்ந்து, சுற்றுலாப் பகுதியான தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ்கோடி செல்லும் பிரதான சாலையான நடராஜபுரம் பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தனுஷ்கோடி பகுதியில் உள்ள மீனவா்கள் மட்டும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

இரவு நேர ஊரடங்கு காரணமாக ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்களின் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துள்ளது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் ராமநாதசுவாமி கோயில், தற்போது பக்தா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோன்று மண்டபத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கடற்கரை பூங்காவின் முகப்பு கதவுகள் செவ்வாய்க்கிழமை பூட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT