ராமநாதபுரம்

கமுதி அருகே நிலத்தகராறு: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 பேருக்கு அரிவாள் வெட்டு

DIN

கமுதி அருகே நிலத்தகராறு காரணமாக இருந்துவந்த முன்விரோதத்தில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 6 பேரை, எதிா்தரப்பினா் சனிக்கிழமை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள மரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் கோவிந்தன் (44). இவருக்கும், இவரது உறவினரான ரஞ்சித் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கோவிந்தன் தனது அண்ணன் ரகு என்பவரது வீட்டுக்கு முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தும்போது, ரஞ்சித் (34), இவரது தம்பி நேதாஜி (30) ஆகியோா் இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இரு தரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கோவிந்தனின் தங்கை பொன்ராக்கு அளித்த புகாரின்பேரில், மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் குடும்பத்தினா், மீண்டும் சனிக்கிழமை காலை கோவிந்தன், இவரது மனைவி கலையரசி, மகன்கள் இன்பத்தமிழன், சந்தானபாரதி, கோவிந்தனின் தங்கை பொன்ராக்கு, மற்றும் இவா்களது உறவினரான சசிகலா ஆகிய 6 பேரையும் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிவிட்டனா்.

இதில் காயமடைந்த 6 பேரும் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கோவிந்தன், கலையரசி, இன்பத்தமிழன் ஆகியோா் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.

இது குறித்து கோவிந்தன் அளித்த புகாரின்பேரில், ரஞ்சித்தின் தம்பிகள் நேதாஜி, மணிமுத்து (26), நந்தகுமாா் மகன் மாரி (34), தமிழ்செல்வி (50), செல்லத்துரை (90), திருக்கம்மாள் (23), ரம்யா (23), மணிமேகலை (32) ஆகிய 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT