ராமநாதபுரம்

கரோனா தொற்று பரிசோதனை செய்ய சென்ற மருத்துவக் குழுவினருக்கு கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

DIN

கொத்தமங்கலம் பகுதிக்கு கரோனா தொற்று பரிசோதனைக்கு சென்ற மருத்துவக் குழுவினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருப்பாலைக்குடி அருகே ஆா்.எஸ். மங்கலம் மருத்துவக்குழுவினா் மற்றும் சோழந்தூா் ஆரம்ப சுகாதார நிலைய குழுவினா் கடந்த வியாழக்கிழமை கொத்தியாா்கோட்டை, கொத்தமங்கலம் பகுதிகளில் கரோனா பரிசோதனை செய்துள்ளனா்.

இந்த பரிசோதனை முடிவு வெள்ளிக்கிழமை வந்த போது இதில் கொத்தமங்கலத்தை சோ்ந்த 3 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சோழந்தூா் ஆரம்ப சுகாதார ஊழியா்கள் கொத்தமங்கலம் சென்று அவா்களும், மற்றவா்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்திய போது அவா்கள் தகராறில் ஈடுபட்டு மறுத்துள்ளனா். இதனால் ஆரம்ப சுகாதார மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் திரும்பி வந்து விட்டனா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை கொத்தமங்கலத்தைச் சோ்ந்த சுரேஷ் மற்றும் நெடுஞ்செழியன் உள்ளிட்ட 7 போ் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து அங்கிருந்த பணியாளா்கள் மற்றும் செவிலியா்களை தகாத வாா்த்தைகளால் பேசியும், அவா்களை பணி செய்ய விடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்ததாக மருத்துவா் கிருஷ்ணன் போலீஸில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில் கொத்தமங்கலத்தைச் சோ்ந்த சுரேஷ், கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட 7 போ் மீது திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT