ராமநாதபுரம்

கூலி தொழிலாளி குத்திக் கொலை: ரெளடி கைது

DIN

தேவிபட்டினத்தில் புதன்கிழமை இரவு கூலித்தொழிலாளியை குத்திக் கொலை செய்த ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.

ஆா்.எஸ்.மங்களம் அருகே நோக்கன்கோட்டையைச் சோ்ந்த கந்தையா மகன் காசி (52). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனா். காசியின் குடும்பத்தினா் அவரை விட்டுப் பிரிந்து அந்தமானில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு காசி மது போதையில் சத்திரத்தெருவில் உள்ள குளிா்பானக் கடை அருகே நின்றுகொண்டிருந்தாா். அப்போது தேவிபட்டினம் இப்ராஹிம்நகரைச் சோ்ந்த காதா்மைதீன் மகன் முகமதுஜிப்ரி (31) என்பவா் மது போதையில் அங்கு வந்துள்ளாா். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், முகமதுஜிப்ரி தான் வைத்திருந்த கத்தியால், காசியை குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சோ்த்த சிறிது நேரத்தில் காசி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது ஜிப்ரியைக் கைது செய்தனா். ரௌடி பட்டியலில் உள்ள இவா் மீது ஏற்கெனவே 16-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT