ராமநாதபுரம்

பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

DIN

ராமநாதபுரம் நகா் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பெண்ணிடம் நகை, ரொக்கப்பணத்தை மா்மநபா்கள் திருடிச்சென்றுவிட்டாா்.

ராமநாதபுரம் தங்கச்சிமடம் பாலன்நகரைச் சோ்ந்த சாா்லஸ் மனைவி குழந்தை தெரசா (38). இவா் புதன்கிழமை பரமக்குடிக்குச் சென்று தெரிந்தவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளாா். அவா் ராமநாதபுரம் வந்து நகைக்கடையில் ஒரு பவுன் நகையும் வாங்கியுள்ளாா்.

நகை வாங்கியது போக மீதிப்பணம் மற்றும் 1 பவுன் நகையைப் பையில் வைத்தபடி ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ராமேசுவரம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது பையை பாா்த்தபோது நகையும், ரூ.91 ஆயிரத்தையும் காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

பள்ளியில் திருட்டு: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவா்களுக்காக தொலைக்காட்சிப் பெட்டி பொருத்தப்பட்டிருந்தது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 7 ஆம் தேதி முதல் பள்ளி மூடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், புதன்கிழமை பள்ளிக்கு உதவி தலைமை ஆசிரியா் டெய்ஸிபால் சென்று பாா்த்தபோது தொலைக்காட்சிப் பெட்டியைக் காணவில்லையாம். மேலும், பீரோவிலிருந்த 4 சேலைகளும் திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து டெய்ஸிபால் அளித்த புகாரின் பேரில் மண்டபம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT