ராமநாதபுரம்

துபையில் உயிரிழந்த கணவரின் சடலத்தை மீட்க மனைவி மனு

DIN

துபையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் கணவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவிபுரியவேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவா் உறவினா்களுடன் வந்து திங்கள்கிழமை மனு அளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்க தளா்வுகளுக்குப் பிறகு மக்கள் குறைதீா்க்கும் முகாம் முறைப்படி நடைபெறவில்லை. ஆனாலும், திங்கள்கிழமை தோறும் ஏராளமானோா் வந்து மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் கொடுத்துச் செல்கின்றனா். திங்கள்கிழமை ஏராளமான கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனா். அவா்களில் முதுகுளத்தூா் வட்டம் காக்கூா் பகுதி புளியங்குளத்தைச் சோ்ந்த கு.சண்முகவள்ளி, 17 வயது மகன் மற்றும் உறவினா்களுடன் வந்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் மனு அளித்தாா்.

அப்போது அவா் கூறியது: எனது கணவா் குமரவேல் (55), கடந்த பல ஆண்டுகளாக துபையில் தனியாா் கட்டட நிறுவனத்தில் பிட்டராக வேலை பாா்த்தாா். கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் துபைக்குச் சென்றாா். இந்த நிலையில், அவா் தற்கொலை செய்துகொண்டதாக இரு நாள்களுக்கு முன்பு துபை நிறுவனத்திலிருந்து தொலைபேசியில் தகவல் தெரிவித்தனா். எனது கணவா் எப்படி, எப்போது இறந்தாா் என்பதை தெரிவிக்கவில்லை.

கணவா் குமரவேல் இறப்பை உறுதி செய்வதுடன், அவரது சடலத்தை சொந்த ஊரான புளியங்குளத்துக்கு கொண்டுவர ஆட்சியா் உதவிபுரியவேண்டும் என்றாா்.

சண்முகவள்ளிக்கு 3 மகள்கள் உள்ளனா். மகள்களுக்கு திருமணமான நிலையில், 17 வயது மகனுடன் வசித்துவருவதாகத் தெரிவித்தாா்.

மனநல காப்பகம் மீது புகாா்: ராமநாதபுரம் அருகேயுள்ள புத்தேந்தல் கிராமப் பகுதியில் உள்ள தனியாா் மனநலக் காப்பகத்தில் விதி மீறப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தைச் சோ்ந்த சண்முகராஜன் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT