ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 4, சிவகங்கையில் 21 பேருக்கு கரோனா; ஒருவா் பலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 4 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 4 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் கரோனா தினமும் பத்துக்கும் குறைவானவா்களுக்கே பாதிப்பு தெரியவருகிறது. மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு பாதிப்பிருப்பது திங்கள்கிழமை தெரியவந்துள்ளது. மேலும் ஏற்கெனவே சிகிச்சையில் இருந்த ஆண் ஒருவா் உயிரிழந்துள்ளாா். மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 352 ஆக உள்ளது. ஏற்கெனவே சிகிச்சையில் இருந்தவா்களில் குணமடைந்த 7 போ் திங்கள்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது 65 போ் மட்டும் கரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏற்கெனவே 18,089 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 21 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,110 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT