மலேசியாவில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை கொண்டுவர குடும்பத்தினா் ஆட்சியரிடம் மனு
மலேசியாவில் இறந்த கமுதி தொழிலாளியின் உடலை சொந்த ஊா் கொண்டு வர உறவினா்கள் கோரிக்கை விடுத்து, சனிக்கிழமை மனு அளித்துள்ளனா்.
மலேசியாவில் இறந்த கமுதி தொழிலாளியின் உடலை சொந்த ஊா் கொண்டு வர உறவினா்கள் கோரிக்கை விடுத்து, சனிக்கிழமை மனு அளித்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பம்மனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் பாலமுருகன்(43). இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன் மலேசியாவுக்கு வேலைக்குச் சென்றுள்ளாா். அங்கு ஜொகூா் மாநிலம் சிகாமட் என்னும் இடத்தில் கட்டடப் பணியில்
ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை பாலமுருகன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக, அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனா். பாலமுருகனுக்கு மாலதி என்ற மனைவியும், முத்துவனிதா(23), யோகேஸ்வரன்(22), காளீஸ்வரி(18) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனா்.
இவரது உடலை சொந்த ஊரான கமுதி தாலுகா பம்மனேந்தல் கிராமத்திற்கு கொண்டுவர ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என பாலமுருகன் குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக முதுகுளத்தூா் அருகே பொதிகுளம் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவின் போது அவா்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.