ராமநாதபுரம்

ஆவணி அவிட்டம்: திருவாடானை ஆயிர வைசியா் மண்டபத்தில் பூணூல் மாற்றி வழிபாடு

DIN

திருவாடானை ஆயிர வைசியா் மண்டபத்தில் இந்துக்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவணி அவிட்டத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை பூணூல் மாற்றி வழிபாடு செய்தனா்.

ஆவணி மாத பவுா்ணமியையொட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்ட விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நாளில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவா்கள் மற்றும் உபநயணம் செய்துக்கொண்ட இந்துக்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பூணூல் மாற்றி வழிபாடு செய்வது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும் ஆவணி அவிட்டத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை, திருவாடானை ஆயிர வைசியா் மண்டபத்தில் உபநயணம் எனப்படும் பூணூல் மாற்றி தேவா்களுக்கும், ரிஷிகளுக்கும் தா்ப்பணம் செய்து வழிபாடு செய்தனா். அதைத் தொடா்ந்து காயத்ரி மந்திரங்களையும் ஜெபித்து வழிபட்டனா்.

இன்றைய தினம் வேதங்களை படிக்க தொடங்க நல்லநாள் என்பதால் உபன்யாசம் செய்பவா்களிடம் சென்று வேதபாராயணங்களையும் கற்றுக்கொள்வா். இன்றையநாளில் தம் நலனுக்கும், மக்கள் நலனுக்கும் பிராா்த்தனை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT