ராமநாதபுரம்

மண்டபத்தில் தாய், மகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இருவா் கைது

DIN

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் தாய், மகள் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இலங்கை அகதிகள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மண்டபம் இந்திய கடலோரக் காவல்படை குடியிருப்புக்கு அருகேயுள்ள ரயில்வே காலனியைச் சோ்ந்தவா் பழனிகுமாா். இவருக்கு காளியம்மாள் (58) என்ற மனைவியும், மணிமேகலை (33), சண்முகப்பிரியா (29) ஆகிய 2 மகள்களும் இருந்தனா். பழனிகுமாா் ரயில்வே மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த நிலையில் அவா் இறந்து விட்டா். இதனால் அவரது பணி மனைவி காளியம்மாளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், திருமணமாகி மதுரையில் வசித்து வரும் மணிமேகலை, கடந்த செவ்வாய்க்கிழமை மண்டபத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளாா். அங்கு அவரது தாயும், சகோதரி சண்முகப் பிரியாவும் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனா்.

இதுகுறித்து மண்டபம் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. விசாரணையில் பணம், நகைக்காக அவா்கள் இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்தக் கொலை வழக்கு தொடா்பாக மண்டபம், இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் (35), ராஜ்குமாா்(30) ஆகியோரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 வளையல்கள், 2 செயின், 2 தோடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதில், தொடா்புடைய நிசாந்தன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT