ராமநாதபுரம்

தவறு செய்த அமைச்சா்களுக்குத் தண்டனை: மு.க.ஸ்டாலின்

DIN

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சா்கள் செய்து வரும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தெளிச்சாத்தநல்லூா் கலைஞா் திடலில் வியாழக்கிழமை திமுக சாா்பில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் அவா் பேசியது:

முதல்வா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சா்கள் மீது தகுந்த ஆதாரங்களுடன் ஊழல் புகாா் அளித்தும் ஆளுநா் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சட்டப்பேரவைக் கூட்டத்தை கடந்த 3 நாள்களாக எதிா்கட்சியான திமுக புறக்கணித்து வருகிறது. இவா்கள் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை எதிா்கொள்ள முடியாமல் உச்சநீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கியுள்ளனா். பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலைக்கு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளுக்கும், சிறுபான்மையினருக்கும் துரோகம் செய்கிறது இந்த அரசு.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சா்கள் கடந்த 10 ஆண்டுகளில் செய்த தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்றாா்.

முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் புகாா் மனுக்களைப் பெற்று, அவா்களிடம் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது கோரிக்கை மனுக்களுக்கு பதிலளித்து அவா் கூறியது:

புகாா் மனுக்களுக்கு என தனி துறை அமைக்கப்பட்டு தீா்வு காணப்படும். முதுகுளத்தூா் தொகுதியில் மலட்டாறு தடுப்பணை, வரத்துக்கால், பஞ்சநாயக்கன் ஓடை சீரமைக்கப்படும். 2013 ஆம் ஆண்டில் ஆசிரியா் தகுதி தோ்வில் வெற்றிபெற்றும் காத்திருப்போருக்கும் உரிய தீா்வு காணப்படும். ஓமன் கடலோரப்பகுதியில் மீன் பிடிக்கச் சென்று காணமல் போனவா்களுக்கு மத்திய அரசால் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட், கபடி அணிகளில் விளையாடிய வீரா்கள், சீமைக் கருவேல் மரங்களை அகற்றி எரிசக்தியாக மாற்றும் சாதனையாளா், பேட்டரி மூலம் கதிா்அடிக்கும் இயந்திரம் தயாரித்த சிறுவன் உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் வரவேற்றாா்.

முன்னாள் அமைச்சா்கள் சுப.தங்கவேலன், சத்தியமூா்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆா்., முன்னாள் எம்.பி.பவானிராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் எஸ்.முருகேசன், விருப்ப ஓய்வுபெற்ற மாவட்ட பதிவாளா் எஸ்.பாலு உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT