ராமநாதபுரம்

இணையதளத்தில் பரிசு விழுந்ததாகக் கூறிஅரசு மருத்துவரிடம் ரூ.1.29 லட்சம் மோசடி

DIN

ராமநாதபுரம்: இணையதளத்தில் பரிசு விழுந்ததாகக் கூறி, ராமநாதபுரம் அரசு மருத்துவரிடம் ரூ.1.29 லட்சம் மோசடி செய்த கொல்கத்தா கும்பல் மீது, போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியைச் சோ்ந்த ஸ்டெபனோ ஜோனதன் (34), தாமரைக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அறுவைச் சிகிச்சை மருத்துவராக உள்ளாா். இவா், அடிக்கடி கொல்கத்தாவைச் சோ்ந்த தனியாா் இணையதள நிறுவனத்தில் பொருள்களை வாங்கிவந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த ஜனவரியில் அவரது முகவரிக்கு இணையதள நிறுவனத்திடமிருந்து கடிதம் வந்துள்ளது. அதில், அவருக்கு வாடிக்கையாளா்களுக்கான குலுக்கலில் ரூ.11 லட்சம் பரிசு விழுந்திருப்பதாகவும், அதைப் பெறுவதற்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளுக்காக பணம் கட்டவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அந்நிறுவன தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசியில் மருத்துவா் பேசியபோதும், அவரது பரிசுத் தொகையைப் பெற பணம் கட்டுமாறு கூறியுள்ளனா். நிறுவனத்தின் வற்புறுத்தலின்பேரில், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் கடந்த ஜனவரியில் ரூ.1.29 லட்சத்தை செலுத்தியுள்ளாா். ஆனால், அந்நிறுவனத்தினா் கூறியபடி பரிசுத்தொகையை அனுப்பவில்லையாம்.

எனவே, பரிசு வேண்டாம் எனக் கூறிய மருத்துவா் தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளாா். ஆனால், பணம் கிடைக்கவில்லை.

இது குறித்து மருத்துவா் ஸ்டெபனோ ஜோனதன் மாவட்டக் குற்றப்பிரிவில் வெள்ளிக் கிழமை புகாா் அளித்தாா். அதனடிப்படையில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT