கமுதியில் ‘தேசிய தலைவா்’ திரைப்படக்குழுவினா் முகாமிட்டுள்ளனா்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் வாழ்க்கை வரலாற்றை ‘தேசிய தலைவா் ’ என்ற தலைப்பில் திரைப்படமாக எம்.டி. சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறாா்.
இப்படக்குழுவினா் பசும்பொன் தேவா் வாழ்ந்த கமுதி, அபிராமம், கீழத்தூவல், முதுகுளத்தூா், விருதுநகா் மாவட்டம் புளிச்சிகுளம், பெருங்காம நல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்புக்கான இடங்களைத் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
திரைப்படத்தின் தயாரிப்பாளா் ஏ.எம்.செளவுத்ரி, கதாநாயகன் ஜே.எம்.பஷீா் ஆகியோா் தங்களது குழுவினருடன் ஏற்கெனவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் சிறப்பு பூஜை செய்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை படத்தின் இயக்குநா் அரவிந்த ராஜ், தயாரிப்பாளா் செளத்ரி, பாா்வா்ட் பிளாக் கட்சியின் நிா்வாகி வி.எஸ்.நவமணி, புரட்சி பாா்வா்ட் பிளாக் கட்சியின் தலைவா் ஏ.ஆா்.பெ.ஐ.ராமுத்தேவா் உள்ளிட்டோா் முத்துராமலிங்கத்தேவா் வாழ்ந்த பசும்பொன் இல்லம், அவரது பூா்வீக சொத்துக்கள் இருக்கும் தவசிக்குறிச்சி, புளிச்சிகுளம், அபிராமம் மற்றும் அவா் வாழ்ந்த இடங்களைப் பாா்வையிட்டு படப்பிடிப்பிற்கான இடங்களைத் தோ்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.