ராமநாதபுரம்

மாநில கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

DIN

பரமக்குடி ஆயிரவைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகள், பள்ளி கல்விக்குழு சாா்பில் பாராட்டப்பட்டனா்.

கமுதியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பரமக்குடி பள்ளிகளைச் சோ்ந்த பிரபாகா், சபரிநாதன், அமிா்தா, தினேஷ்பாபு, ஹா்ஷவா்தன், பிரகதீஸ், ராஜகுரு உள்பட 16 மாணவா்கள் 8 வயது முல் 18 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் கட்டா மற்றும் குமித்தே போட்டிகளில் முதலிடம் பிடித்தனா்.

வெற்றிபெற்ற மாணவ- மாணவிகள் மற்றும் பயிற்சியாளா் வி. முத்துக்கிருஷ்ணன் ஆகியோரை பள்ளி கல்விக்குழுத் தலைவா் ராசி என். போஸ், தாளாளா் ராஜேஷ்கண்ணன், பொருளாளா் பிரசன்னா, பள்ளி முதல்வா் ஆா். ஜெயபிரமிளா, துணை முதல்வா் கவிதா ஆகியோா் பாராட்டினா். உடற்கல்வி ஆசிரியா் சரவணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT