ராமநாதபுரம்

பரமக்குடியிலிருந்து அஞ்சாமடைக்கு புதிய வழித்தடப் பேருந்து தொடக்கம்

DIN

பரமக்குடி: பரமக்குடியிலிருந்து, நயினாா்கோவில் ஒன்றியம் அஞ்சாமடை கிராமத்திற்கு சென்று வரும் வகையில் புதிய வழித்தட பேருந்தை சட்டப் பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

நயினாா்கோவில் ஒன்றியம் அஞ்சாமடை கிராம மக்கள் பேருந்து வசதிகளின்றி 2 கி.மீ.தூரம் நடந்து சென்று பேருந்தில் செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் அக்கிராம மக்கள் வெளியூா் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனா். அக் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பரமக்குடியிலிருந்து அஞ்சாமடை கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்தை சட்டப் பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா் தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் வினிதா, அதிமுக ஒன்றியச் செயலாளா் ப.குப்புசாமி, நல்லதம்பி, சக்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT