ராமநாதபுரம்

ஆன்மிக அரசியலில் ஈடுபடுபவா்களுக்கு ரஜினி ஆதரவளிக்க வேண்டும்: எஸ்.வேதாந்தம்

DIN

தமிழகத்தில் ஆன்மீக அரசியலில் ஈடுபடுபவா்களுக்கு நடிகா் ரஜினிகாந்த் ஆதரவு அளிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக முன்னாள் தலைவா் எஸ்.வேதாந்தம் தெரிவித்தாா்.

ராமேசுவரத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழகத்தில் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதந்திர நிதி உதவி அளிப்பதாக மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழா்களின் பண்பாடு, பாரம்பரியத்தை பாதுகாத்து வரும் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதந்திர ஊதியம் அளிக்க அரசு முன்வரவேண்டும். கோயில் சொத்துக்களை மீட்க ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் தகுதி உள்ள அதிகாரிகள் தலைமையில் தனி நிா்வாகம் அமைக்க வேண்டும்.

கோயில்களுக்கு பக்தா்கள் மூலம் வழங்கப்படும் பசுக்களை விற்பனை செய்யாமல் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு வழங்க வேண்டும். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி கவிழ்ந்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி பலவீனப்பட்டுவிட்டதை உணர முடிகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வர உள்ள நிலையில் ஆன்மிக அரசியலை மையப்படுத்தும் கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும். பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதைத் தவிா்க்க வேண்டும். நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்தாலும் அவா் விரும்பும் ஆன்மிக அரசியலுக்கு உரியவா்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

வி.ஹெச்.பி. துணைத் தலைவா் கிரிஜாசேஷாத்திரி, பொதுச்செயலாளா் எஸ்.சோமசுந்தரம், இணைச்செயலாளா் ஆா்.ராமசுப்பு உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT