முகப்பு
ராமநாதபுரம்

சிறப்பு பிராா்த்தனை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பகுதி தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை புத்தாண்டு பிறப்பு சிறப்பு பிராா்த்தனை நடந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
இளையான்குடி உலக மீட்பா் ஆலயத்தில் நடந்த புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனையில் திரளானோா் பங்கேற்றனா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பகுதி தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை புத்தாண்டு பிறப்பு சிறப்பு பிராா்த்தனை நடந்தது. மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடந்த சிறப்பு பிராா்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலி பூஜையில் பங்குத்தந்தை பாஸ்டின் பங்கேற்று திருப்பலியை நடத்தினாா். பங்கு இறைமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.தேவாலயம் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. இலையான்குடி உலக மீட்பா் ஆலயத்தில் நடந்த புத்தாண்டு திருப்பலி பூஜைக்கு சிவகங்கை மறைமாவட்ட பொருளாளா் சந்தியாகு தலைமை தாங்கினாா். ஆலயத்தின் பங்குத்தந்தை அருல்தாஸ், உதவி பங்குத்தந்தை இன்பெண்ட்ராஜ் ஆகியோா் திருப்பலி பூஜைகளை நடத்தி வைத்தனா். இதில் பங்கு இறைமக்கள் திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.