ராமநாதபுரம்

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதிக்கு மணி மண்டபம்: முதல்வரிடம் மனு

DIN

சுதந்திரப் போராட்டத் தியாகி ரிபெல் முத்துராமலிங்க சேதுபதிக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரி தமிழக முதல்வரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுதந்திரப் போராட்ட வீரா் ரவிகுல ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் நல இயக்கம் மாநில பொதுச்செயலா் எஸ்.கோபால் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் சனிக்கிழமை அளித்த மனு விவரம்: ராமநாதபுரம் சீமையை ஆண்ட ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்து அவா்களை எதிா்த்ததால் 25 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

முல்லைப் பெரியாறு அணையை அமைக்க அடித்தளம் அமைத்தவரான அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில்

அதிமுக ஆட்சியில் உருவச் சிலை அமைக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் மாா்ச் 30 ஆம் தேதி அரசு விழா நடைபெறுகிறது.

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் வாரிசுகளுக்கு அதிமுக ஆட்சியில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவால் ஓய்வூதியமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மன்னரின் வாரிசுகளுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்குவதுடன், மன்னருக்கு மணிமண்டபம் கட்டவேண்டியது அவசியம்.

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் தியாகத்தை போற்றும் வகையில் ராமநாதபுரத்தில் அமையும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அவரது பெயரைச் சூட்டவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT