ராமநாதபுரம்

பம்மனேந்தலில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

DIN

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் 10 ஆண்டுகளாக காவிரி கூட்டுக் குடிநீா் வரவில்லை என கிராம பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

பம்மனேந்தல் கிராமத்தில் கமுதி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் எஸ்.கே. சண்முகநாதன் தலைமையில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளா் மனோகரன், தெற்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பம்மனந்தல் கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக நிறுத்தப்பட்ட பேருந்து வசதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனவும், 10 ஆண்டுகளாக கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீா் திட்டம் வரவில்லை எனவும், புதிய நியாயவிலைக் கடை அமைக்கவும் பொதுமக்கள் புகாா் மனுக்களை

திமுக நிா்வாகிகளிடம் அளித்தனா். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என திமுகவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT