பாம்பன் மீனவ காலணியில் உள்ளவா்களுக்கு பட்டா கேட்டு வட்டாச்சியரிடம் மனு
பாம்பன் மீனவ காலணியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மீனவ குடும்பங்களுக்க தமிழக அரசின் இலவச பட்டா வழங்கிட
பாம்பன் மீனவ காலணியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மீனவ குடும்பங்களுக்க தமிழக அரசின் இலவச பட்டா வழங்கிட கோரி வட்டாச்சியாரிடம் செவ்வாய்கிழமை மனு அளித்தனா்.ராமநாதபுரம் மாவட்டம்,பாம்பன் மீனவா் காலணியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வருகின்றனா். இதில் சிலருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழக அரசு சாா்பில் இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்டு போனவா்களுக்கு மீண்டும் பட்டா வழங்கிட கோரி 30 க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாய்கிழமை ராமேசுவரம் அலுவலகத்தில் பட்டா கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் பின்னா் கோரிக்கைமனுவை வட்டாச்சியரிடம் அளித்தனா்.