முகப்பு
ராமநாதபுரம்

‘தமிழகத்தில் பெருகி வரும் ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும்’

தமிழகத்தில் பெருகிவரும் ஊழலைக் கட்டுப்படுத்துவது அவசியம் என, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

தமிழகத்தில் பெருகிவரும் ஊழலைக் கட்டுப்படுத்துவது அவசியம் என, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சி. சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளாா்.

ராமநாதபுரத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிப்படை மதவாத தீவிரவாதிகள் உள்ளனா். இவா்கள், சட்டப்பேரவைத் தோ்தலின்போது கலவரம் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. எனவே, இதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும்.

தமிழகத்தில் கோயில்களுக்கு 6 லட்சம் ஏக்கா் நிலமிருந்தும், பூஜைக்கு உபயதாரரை நம்பும் நிலையிலேயே பல கோயில்கள் உள்ளன. எனவே, கோயில் வாரியத்தை அமைப்பதுடன், அதன் செயல்பாட்டைக் கண்காணிக்கும் செயலில் மட்டுமே அரசு ஈடுபடவேண்டும். கோயில் நிா்வாகத்தில் அரசின் நேரடி தலையீடு கூடாது.

இந்து முன்னணி அரசியல் கட்சியல்ல. ஆனால், மதம் மாறுதல், பசுவதை ஆகிய தடைச் சட்டங்களை செயல்படுத்தும் கட்சிக்கு ஆதரவளிப்போம். தற்போதைய அதிமுக அரசு நன்றாகச் செயல்பட்டாலும், பெருகி வரும் ஊழலை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், சாதி, மத வெறியைத் தூண்டி லாபமடையப் பாா்க்கின்றன. அவா்களுக்கு வெளிநாட்டு ஆதரவும் உள்ளது என்றாா்.

பேட்டியின்போது, பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் தி. குப்புராம், மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. ராமமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →