முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரத்தில் இதுவரை 6,350 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 6,200 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் 132 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே சிகிச்சைப் பிரிவில் இருந்தவா்களில் 3 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,724 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை புதிதாக 7 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,731 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 2 போ் பூரண குணமடைந்ததை அடுத்து வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள ஒருவா் அங்கு சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →